Followers

கடைசிவரை நான்

Thursday, August 27, 2009

காலங்கள் கடந்தாலும்

கடலலைகள் ஓய்ந்தாலும்

கல் நெஞ்சம் கரைந்தாலும்

கடமைகள் முடிந்தாலும்

கண்களின் ஓரமாய்

காயாத ஈரமாய்

கடைசி வரை நான்

நினைவுகளாய்..............

நண்பனின் மரணம்

Sunday, August 23, 2009

சாதனைகளின் மீது சவாரி செய்யக் காத்திருந்தவன் நீ

உன் திறமைகளின் நிழலிலேயே உலா வந்த ராஜகுமாரர்கள்

நாம் உன் அருகாமையே எம்மை வீரர்களாக்கிவிடும்

அற்புதத்தை எத்தனை முறை பார்த்திருப்போம் எம்

கூடுகளே கூண்டுகள் ஆக்கப்பட்டபோது வேலிகள்

ஒவ்வொன்றாய்த் தீயிலிடப்பட்ட போது - உன்

தோள்களில் துப்பாக்கிகள் குடிவந்தது புதுமையில்லை

உன் இயல்பு அப்படி! கல்லூரிச் சுவர்களில் நீ

கிறுக்கி விட்டுப் போன “ஷே(Che)” பற்றிய குறிப்புகள்

இன்னமும் இருக்கிறது எழுதிய நீ மட்டும் இல்லை!

என் தோழனே!

Thursday, August 20, 2009

சோகமெனில் உன்தோளில்
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்…
மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்…
உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..
தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்…
வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..
உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்…

எங்கே என் காதலி

Tuesday, August 18, 2009

அம்மா வயிற்றில் சுமந்தாள்
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற‌
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாகத் தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!

நட்பு

உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...

நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!